கலெக்டர் ஆபீஸ் அருகே சினிமாவை மிஞ்சிய துணிகரம்.. பட்டப்பகலில் வங்கிப்பணம் கொள்ளை!

Author: Hariharasudhan
16 January 2025, 5:11 pm

கர்நாடகாவில், ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வண்டியில் இருந்து பணத்தைக் கொள்ளையடித்த நபர்களை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பிதூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் அருகே எஸ்பிஐ வங்கி ஒன்று உள்ளது. இந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில், வங்கியில் இருந்து ஏடிஎம் நிலையங்களுக்கு பணம் எடுத்துச் செல்வதற்காக, காலை 10.30 மணியளவில் பணப்பெட்டியை பாதுகாப்பு ஊழியர்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து அங்கு வந்த இருவர், சற்றும் எதிர்பார்க்காத நிலையில், பாதுகாப்பு ஊழியர்கள் மீது மிளகாய்ப்பொடியை வீசிவிட்டு, பணப்பெட்டியை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது, பாதுகாப்பு பணியாளர்களான கிரிஸ் மற்றும் சிவகுமார் ஆகிய இருவரும் கொள்ளையர்களிடம் இருந்து பணப்பெட்டியைப் பாதுகாக்க போராடி உள்ளனர்.

ATM Money Robbery at Karnataka Bank

அப்போது, கொள்ளையர்களில் ஒருவர் துப்பாக்கியால் இரு ஊழியர்களையும் சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலே பாதுகாப்பு பணியாளர் கிரிஸ் உயிரிழந்தார். மேலும், மற்றொரு பணியாளர் சிவகுமார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: சர்ச்சில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சாதி பெயர் சொல்லி திட்டியதால் தற்கொலை முயற்சி!

மேலும், இது தொடர்பான செல்போன் காட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில், கொள்ளையர்களை சாலைகள் செல்லும் மக்கள் கற்களை எடுத்து அடித்தபோதும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய படி, பணப்பெட்டியை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லக்கூடிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தற்போது, தனிப்படை அமைத்து கர்நாடக போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!