பழனி முருகன் கோவிலில் ஒரே நேரத்தில் வந்த பிரபலங்கள் : நடிகர்கள் வருகையால் செல்பி எடுக்க குவிந்த கூட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2023, 9:29 pm

பழனி முருகன் கோவிலில் ஒரே நேரத்தில் வந்த பிரபலங்கள் : நடிகர்கள் வருகையால் செல்பி எடுக்க குவிந்த கூட்டம்!!

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் அவ்வப்போது சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமா நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி மற்றும் தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் ஆகியோர் இன்று கோவையில் இருந்து பழனிக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் வழியே மலைக்கோவிலுக்கு சென்றனர்.

பின்னர் சன்னதிக்கு சென்று அவர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து மீண்டும் ரோப்கார் வழியே அடிவாரம் வந்து காரில் சென்னை புறப்பட்டு சென்றனர். முன்னதாக கோவிலுக்கு வந்த அவருடன் பொதுமக்கள், பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!