விஜய் டிவியை விட்டு விலக முடிவெடுத்த பிரபலம்.. அதிர்ச்சி முடிவுக்கு இதுதான் காரணமா..?

Author: Rajesh
28 May 2022, 7:51 pm

விஜய் டிவியின் டாப் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மேலும் பாப்புலர் ஆனாலும் மீண்டும் விஜய் டிவிக்கே வந்து தற்போது நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்தமாதம் பிரியங்கா தனது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடி இருக்கிறார். பிக் பாஸ் நண்பர்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலரும் சேர்ந்து பிரியங்காவுக்கு பிறந்தநாளில் பல கிப்ட்கள் கொடுத்து இருக்கின்றனர். அதை எல்லாம் பார்த்து பிரியங்கா நெகிழ்ச்சி ஆகி இருக்கிறார். கேக் வெட்டி, முகத்தில் எல்லாம் பூசி மகிழ்ச்சியாக பிரியங்கா பிறந்தநாளை கொண்டாடி முடித்திருக்கிறார். அந்த வீடியோவை அவர் ஒரு மாதம் கழித்து தற்போதுதான் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில் பாலா உடன் பேசும் ஒரு பகுதியும் இடம் பெற்று இருக்கிறது. தனக்கு 30 வயது ஆகிவிட்டது, அதனால் வயதானவர் போன்ற ஃபீல் வருகிறது, அதனால் நான் இதோடு தொலைக்காட்சியை விட்டுவிட்டு ஒரு பிரேக் எடுக்கலாம் என இருக்கிறேன் என தெரிவித்து இருக்கிறார் பிரியங்கா.

அதற்கு பதில் சொன்ன பாலா ‘மைக்கை பிடித்தவர்கள் எல்லாம் ஆங்கர் ஆகிவிட முடியாது, மைக்கிற்கே பிடித்தவங்க தான் ஆங்கர். நீயே நினைத்தாலும் அது உன்னை விடாது’ என கூறி பிரியங்காவின் முடிவை மாற்ற சொல்லி இருக்கிறார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?