திடீரென செல்போன் வெடித்து விபத்து… பழுதுநீக்கம் செய்யும் கடையில் அதிர்ச்சி ; ஷாக்கிங் சிசிடிவி காட்சிகள்…!!!

Author: Babu Lakshmanan
5 February 2024, 12:07 pm

பழனியில் செல்போன் கடையில் வாடிக்கையாளரின் செல்போனை பழுதுநீக்கம் செய்து கொண்டிருந்த போது செல்போன் வெடித்து சிதறிய சி.சி.டிவி காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாராபுரம் சாலையில் சபரி கிரி என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று வாடிக்கையாளர் ஒருவர் ரெட்மி நோட் 8 ப்ரோ மாடல் செல்போன் ஒன்றை சர்வீஸ் செய்வதற்கு கொண்டிருந்தார்.

அப்போது, செல்போனை சர்வீஸ் செய்து கொண்டிருந்தபோது, திடீரென செல்போன் வெடித்து சிதறியதால் அலறி அடித்து கொண்டு சபரிகிரி செல்போன் கடையை விட்டு வெளியே சென்று விட்டார். மேலும், செல்போனிலிருந்து திடீரென கரும்புகைகள் கடை முழுவதும் கிளம்பியதால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

மேலும் அவர் கடையில் பொறுத்திருந்த சி.சி.டிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி