செல்போன் கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு : சிசிடிவி காட்சி கொண்டு மர்மநபர்களை தேடும் போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2022, 10:01 pm

திருப்பூர் : பல்லடம் அருகே அதிகாலை செல்போன் கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் ராயர்பாளையத்தை சேர்ந்தவர் சனுப்.இவர் பல்லடத்தை சின்னக்கரை அருகே லட்சுமிநகர் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற அவர் இன்று காலை கடைக்கு வந்த பொழுது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த பொழுது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 65 புதிய செல்போன்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரிந் அடிப்படையில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதிகாலை ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே வந்து மர்மநபர் கடையில் இருந்த செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பல்லடம் போலீசார் கொள்ளை அடித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!