பள்ளத்தில் கவிழ்ந்த சிமெண்ட் கலவை இயந்திரம் : நூலிழையில் கீழே குதித்து தப்பிய ஓட்டுநர்… திக் திக் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2022, 2:17 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எம்.குன்னத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து கிளியூர் செல்லும் தார் ரோட்டின் குறுக்கே சிறு பாலம் போடும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று சிமெண்ட் கலவை இயந்திரம் கலவையை இறக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. அந்த வாகனம் பள்ளத்தில் கவிழும் போது அந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் உள்ளே இருந்து வெளியே எகிறி குதித்து அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர்த்தப்பினார்.

https://vimeo.com/750636303

இந்த வீடியோ வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…