மதுபாட்டிலில் பூரான்… நுகர்வோர் நீதிமன்றத்தை நாட மதுப்பிரியர் முடிவு : வைரலாகும் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2023, 9:13 am

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த மேல்புறம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையில் வாங்கிய மதுபானத்தில் பூரான் என்ற விஷப்பூச்சி கிடந்துள்ளது.

டாஸ்மாக் கடையில் பாட்டிலை காட்டி குடிமகன் கேள்வி எழுப்பிய உடன் பூரான் என்பது சைனாவில் முக்கியமான உணவு பொருள்தான் தவறாக நினைத்து விட வேண்டாம் எனக் கூறி பாட்டிலை பறித்து விட்டு வேறு மதுபான பாடலை கொடுத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முன்னதாக தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆயத்தீர்வை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இல்லா விட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடபோவதாக அந்த பூரான் கிடந்ததாக கூறப்படும் மது பாட்டிலுடன் மது பிரியர் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!