உளவுத்துறை கொடுத்த வார்னிங்… விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்த மத்திய அரசு!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2025, 11:34 am

இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்கள், விஐபிகளக்கு மத்திய அரசும் மாநிலம் அரசு பாதுகாப்பு வழங்க சில அளவுகோல்களை வைத்துள்ளன.

அதில் பாதுகாப்பு தேவை அடிப்படையில் X,Y, Z, Z+ போன்ற பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுகளுக்கு பாதுகாவலர்கள் எண்ணிக்கை குறைவாகவும், அதிகமாகவும் இருக்கும்.

இதையும் படியுங்க: காதலர் தினத்தில் கொடூரம்.. காதலிக்கு ஸ்கெட்ச் போட்டு காதலன் வெறிச்செயல்!

X பிரிவில் பாதுகாப்பு பெறும் நபருடன் 2 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் இருப்பர். அதிலும் ஒரு முறை ஒருவர் என மாறி மாறி பாதுகாப்பு கொடுப்பர்.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Y பிரிவு என்பது சிஆர்பிஎஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் உடனிருப்பர்.

விஜய்க்கு 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர். இந்த Y பிரிவு பாதுகாப்பு என்பது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

Y Security For Vijay

விஜய் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது-

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!