தென்னிந்திய திருச்சபையின் திருச்சி – தஞ்சை திருமண்டலத்தில் 75 ஆம் ஆண்டு பவள விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தென்னந்திய திருச்சபை தஞ்சை மற்றும் திருச்சி மண்டலத்தின் பேராயர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
மேலும் இவ்விழாவில் ரோமன் கத்தோலிக்க பேராயர் ஆரோக்கியராஜ், தமிழ்லூத்தரன் திருச்சபையின் பேராயர் டேனியல் ஜெயராஜ், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் தென்னந்திய திருச்சபையின் போதகர்கள் மற்றும் திருச்சபையின் அங்கத்தினர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இவ்விழாவில் கல்லூரி மற்றும் திருமண்டலங்களுக்கு உட்பட்ட 125 திருச்சபைகளில் இருந்து ஒருசில திருச்சபைகள் தங்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
அதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பவன விழா நினைவு தூண் திறந்து வைக்கப்பட்டது. மேலும் தென்னந்திய திருச்சபை வளர்வதற்கு காரணமாக இருந்த முன்னாள் பொறுப்பாளர்கள் அனைவருக்கும், இந்நாள் பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை செய்து வைத்தார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் நினைவுபரிவு வழங்கினார். மேலும் அமைச்சர்கள் 75ஆம் ஆண்டு பவள விழா மலர் வெளியிட்டு அறிமுகப்படுத்தினார்கள்.
தொடர்ந்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு , சிறுபான்மை நிறுவனம் இந்த விழா நூற்றாண்டை காண வேண்டும். நூற்றாண்டை தாண்டியும் இருக்கும்.இந்த கல்லூரியில் வளர்ந்து விடுவதை பற்றி எனக்கு தெரியும் ஏனென்றால் நான் இங்கே இருந்தவன்.
அகில இந்திய அளவில் பிஷப் கல்லூரி பெருமைப்பட்டு இருக்கிறது. அதற்காக உழைத்தவர்கள் எல்லாருக்கும் மேடையிலே மரியாதை செய்து இருக்கிறார்கள். என்னுடைய தொகுதியில் இந்த கல்லூரி இருப்பது மிகுந்த பெருமையாக கருதுகிறேன்.
இங்க இருக்குற செஞ்சி மஸ்தான் குறித்து செல்ல வேண்டுமென்றால் அவருக்கு 9 சகோதரர்கள். அவர்களுக்கு படிக்க வைத்து தன்னுடைய சொத்தை எல்லாம் கொடுத்து விட்டு 60 செண்டை வைத்துக் கொண்டு வாழ்கிற ஒரு நல்ல மனிதர். நல்ல சகோதர பாசம் கொண்டவர் அப்படி இருந்தால் தான் நம் பொது மக்களுக்கு பணியாற்ற முடியும்.
சிறுபான்மைபிரிவை ஏற்றுக் கொண்டு அவருக்கு மதம் என்று தான் இல்லை. இஸ்லாமியராக இருந்தாலும் அனைத்து மதத்தினரும் இணைந்து செயல்படுகிறார்.
அவர் திராவிடம் மட்டும் என்று சொன்னார். அவர் கலைஞருடைய கொள்கையிலே பற்றுள்ளவராய் இருப்பார்.
சிறுபான்மை மக்களோடு இருந்தாலும் சரி இட ஒதுக்கீடு முனையாக இருந்தாலும் கடுமையாக கொள்கையில் பணியாற்றுவார் கலைஞர் அவர்கள். நாங்களே நினைத்தோம் அவரைப் போல தான் முதலமைச்சர் ஸ்டாலினும்.
ஆனால் எச். ராஜா சொல்கிறார் ஸ்டாலின் மிகுந்த கெட்டிக்காரராக இருக்கிறார். அவரே இப்படி சொல்லக்கூடிய அளவுக்கு இந்த சமுதாய மக்களோடு உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் கிடைக்க உறுதியாக கலைஞர் காட்டிலும் உறுதியாக இருக்க கூடிய தலைவராக முதலமைச்சர் இருக்கிறார்.
மூத்தவர்களுக்கு 91ஆம் ஆண்டு கிறிஸ்தவ பெருமக்கள் எவ்வளவு பாதித்தார்கள் என்று தெரியும் மதமாற்ற தடைச் சட்டம், கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு, மருத்துவமனைகளுக்கு எந்த பணிகள் ஒதுக்காமல் இருந்தது அனைவரும் மாணவர்களோடு சேர்ந்து போராட நிலை இருந்தது.
அதை மாற்றி தொடர்ந்து உங்கள் வளர்ச்சிக்காக இந்த கழகம் இருக்கும் அதில் கொஞ்சம் சுயநலமும் இருக்கிறது உங்களை வாழ வைத்தால்தான் எங்களுக்கு வாழ்வு கிடைக்கும்.
இங்கு இருக்கும் பேராயர் சந்திரசேகரன் பேராயராக இல்லை என்றால் எங்களைப் போல எம்எல்ஏ வாக வந்திருப்பார்.அவர் வந்தவுடன் சிறப்பாக இருக்க வேண்டும் இந்த உழைப்பு தான் இன்று சிறப்பாக வைத்திருக்கிறது. நம்முடைய முதலமைச்சரை பொருத்த வரையில் எல்முனை அளவு கூட மாறாமல் நேராக தராசு போல் நின்று கொண்டிருக்கிறார்.
சட்டமன்றத்திலேயே ஆதி திராவிடர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தால் ஆதிதிராவிடர்களுக்கு உள்ள சலுகைகள் கிடைக்கும் என்று சட்டத்தை நாங்கள் நிறைவேற்றினோம்.
மத்திய அரசு ஒத்துக்கொள்ளவில்லை இன்று அவர்கள் சொல்லுகிறார்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகை கிடைக்கும் என்று அதற்குக் காரணம் வாக்கு வங்கியை சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்து கொண்டிருக்கிறார்கள்
கொடுத்தால் மகிழ்ச்சி தான். ஆனால் அவர்கள் நல்லதுக்காக கொடுக்கவில்லை
முதலமைச்சர், சிறு துறை வைத்துள்ள அமைச்சர்கள் போட்டி போடலாம். ஆனால் பிரதமரை போட்டு போடுகிறார். தமிழகத்தில் இந்த இடத்திற்கு போவோம்
இந்த வாக்கை நாம் கவர வேண்டும்.
நமது முதலமைச்சர் முழுக்க முழுக்க சிறுபான்மையினர் மக்களுக்கு இருப்பார். என்றைக்கும் உங்களது உறுதுணை வேண்டும் என தெரிவித்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.