சனாதன சக்திகளின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்படுகிறார்… மத்திய அரசு தமிழகத்துக்கு வஞ்சகம் செய்கிறது : வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2023, 6:16 pm
Vaiko - Updatenews360
Quick Share

தமிழக கவர்னரும் சனாதன சக்திகளின் ஏஜெண்டாக இருந்து புதிய கல்வி கொள்கையை ஆதரித்து பேசுகிறார் என்று வைகோ விமர்சித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ புத்தாண்டையொட்டி இன்று கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- மத்தியில் ஆளும் மோடி அரசு பா.ஜனதாவின் ஒவ்வொரு அஜன்டாவையும் நிறைவேற்றி வருகிறது. காஷ்மீரில் 370-வது சட்ட பிரிவை நீக்கினார்கள். புதிய கல்வி கொள்கையை உருவாக்கி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புகுத்த பார்க்கிறார்கள்.

தமிழக கவர்னரும் சனாதன சக்திகளின் ஏஜெண்டாக இருந்து புதிய கல்வி கொள்கையை ஆதரித்து பேசுகிறார். தமிழையும், திருக்குறளையும் பேசி மக்களை ஏமாற்றி விட முடியாது.

சமூக நீதியையும், மதசார்பற்ற தன்மையையும் சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி தொகையை வழங்குவதில் தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது.

சகோதரர் மு.க.ஸ்டாலின் ஆட்சி இந்தியாவில் சிறந்த ஆட்சியாக பாராட்டப்படுகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் எந்த முயற்சியும், போராட்டமும் எடுபடாது இவ்வாறு அவர் கூறினார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 395

    0

    0