ராகுலின் ஒற்றுமை யாத்திரை காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் காணாமல் போகும் : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்..!!!

Author: Babu Lakshmanan
24 September 2022, 7:01 pm

திருச்சி : சர்ச்சையை ஏற்படுத்தும் பேச்சை பேசிய ஆ.ராசாவை விட்டுவிட்டு, அதை எதிர்த்து கேள்வி கேட்ட பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்வது‌ கண்டனத்திற்குரியது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்த இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாதரை தரிசனம் செய்து பின்னர் சக்கரத்தாழ்வார், தாயார் சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த மதிய இணைய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- இரண்டு நாளாக கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாஜக, இந்து முண்ணனியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுக்கு கடுமையான தண்டனையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

என்ஐஏ-க்கு கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தான் சோதனை நடத்தப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். இதை திமுக திரித்து கூறுவதோடு ஓட்டு வங்கி அரசியல் செய்கிறது என்று குற்றம் சாட்டினார். இந்த சோதனை குறித்து பேசக்கூடிய அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமாவது அறிவு வேண்டும், எனக் கூறினார்.

எய்ம்ஸ் மருத்துவமனை 95% கட்டுமான பணிகள் முடிந்துவிட்டதாக நேற்று ஜே.பி.நட்டா தெரிவித்திருந்தாரே என்ற கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- இந்த ஒப்பந்தமானது கடந்த 2018ம் ஆண்டு 1664 கோடி நிதி எய்ம்ஸ் கட்ட திட்ட பணிகள் போடப்பட்டது. இதற்கான நிதி இந்த மாதம் 22ந் தேதி மத்திய ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜே.பி. நட்டா கூறியது முதல் கட்ட ஆரம்ப பணிகள் 95 சதவீதம் நிறைவு இருக்கிறது என்பதுதான். எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி 2026 அக்டோபர் மாதம் நிறைவடையும், என்றார்.

ஆ.ராசாவின் கருத்திற்கு பாஜகவின் பட்டியிலின‌அணி தான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேற யாராக இருந்தாலும் பதில் சொல்லலாம். இது திமுகவின் வெற்று விளம்பரத்திற்கான பேச்சாக உள்ளது‌. வேல் யாத்திரையை பாஜக நடத்திய போது முதல்வர் வேலை கையில் பிடித்து ஒரு அரசியலை நிகழ்த்தினார் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ராகுல் காந்தியின் நடை பயணம் ஆரம்பத்திலேயே தோல்வியை சந்தித்தது உள்ளது.அவர் கேரளாவிற்குள் நுழைந்து நடை பயணத்தில் இருக்கும் போதே கோவா காங்கிரஸ் கட்சியினர் கட்சியை விட்டு வெளியேறினர். அவர் காஷ்மீர் சென்று அடைவதற்க்குள் ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சியும் இந்தியாவிற்க்குள் இல்லாமல் போய்விடும்.

திருச்சி வானொலி நிலையம் இட மாற்றம் செய்வதாகவும், வானொலி நிலையம் மூடப்பட உள்ளதாகவும் வதந்திகள் பரபரப்பட்டு வருகிறது. அது உண்மையல்ல‌. ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவித்து பேசிய கோவை பாஜக மாவட்ட தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கு பதிவு செய்யப்பட்டூள்ளது கண்டனத்திற்குரியது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 540

    0

    0