கடவுள் நம்பிக்கை இல்லாத போது கோவில் நிர்வாகம் மட்டும் எதுக்கு..? திமுகவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி

Author: Babu Lakshmanan
23 May 2024, 12:58 pm

கோவில் மீது நம்பிக்கை இல்லாத அரசு கோவிலை நிர்வகிக்க கூடாது என்றும், கோவிலை விட்டு திமுக அரசு வெளியேற வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மேலூர் அருள்மிகு திருமணங்கீஸ்வரர் திருவுடையம்மன் ஆலயத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது :- காங்கிரஸ் ஆண்டபோது எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. ஏழ்மை ஒழிக்கப்படும் என தெரிவித்தனர். பிரதமர் ஆட்சிக்கு வந்த பிறகு ஏழை மக்களின் நலன் வளர்ச்சி.

மேலும் படிக்க: ஜெயக்குமார் கொலை வழக்கில் விசாரணை இழுபறி… வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு…!!!!

25 கோடி பேர் வறுமை நிலையில் இருந்து மேன்மைக்கு வந்துள்ளனர். 11 லட்சம் கோடி ரூபாய் தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு நிதி அளித்துள்ளனர். தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை பிரதமர் உலக அரங்கில் எடுத்துச் சென்ற பெருமை மோடிக்கு தான் சேரும். 25 ஆண்டுகளில் 2047 ஆம் ஆண்டு நமது நாடு முதன்மையான நாடாக வல்லரசு நாடாக இருக்கும் என்பதை நாம் பார்ப்போம் என பிரதமர் கூறி இருக்கிறார். 1800 கோடி தமிழ்நாட்டிற்கு மீன்வளத் துறைக்காக மட்டும் நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் தற்போது வரை பழவேற்காடு முகத்துவாரம் சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்க தங்களிடம் அறிவுறுத்தினால், மத்திய அரசு வழங்கும்.

மேலூர் கோவில் ராஜகோபுரம் மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து ஆறு மாதங்களாக அங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. சாலைகள் முறையாக சீரமைக்கப்படுவதில்லை. ஆன்மீகத்தின் நம்பிக்கை இல்லாத திமுக அரசாங்கம் கோவிலை நிர்வகிக்க கூடாது என்பது மக்களின் எண்ணமாக உள்ளது. திமுக அரசு கோவிலை விட்டு வெளியேற வேண்டும். ஊர் ஊருக்கு கஞ்சா, வீடுகளுக்கே கஞ்சா வந்துவிடுமா..? என மக்களுக்கு பயம் வந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெட்டு, கொலை, கொள்ளை என சட்ட ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எட்டு முறை பாஜகவிற்கு வாக்களித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் திமுகவினர் கள்ள ஓட்டு போடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!