தனித்தீர்மானம் எல்லாம் வேஸ்ட்… ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதே இதுக்காகத் தான் ; எல்.முருகன் சொன்ன ரகசியம்..!!

Author: Babu Lakshmanan
18 November 2023, 4:53 pm

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடுவதும் அதை திரும்ப பெறுவது என்பது சட்டத்தை தமிழக அரசு தவறாக கையாள்கிறது என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார்

புதுச்சேரிக்கு ஒரு நாள் பயணமாக வருகை புரிந்துள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வுகளில் பங்கேற்றார்.

தொடர்ந்து விவேகானந்தா பள்ளியில் நடைபெற்ற பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- தமிழகத்தில் மசோதாக்கல் திருப்பி அனுப்பியதற்கு தனி தீர்மானம் இயற்ற சட்டப்பேரவை கூடியுள்ளது. மீண்டும் நிறைவேற்றி அனுப்ப உள்ளனர். இது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுப்பார். மசோதாக்களை திருப்பி அனுப்புவது அதில் உள்ள குறைகள் கேட்டறிய தான், அதற்கான உரிய பதிலை கொடுத்தால் ஆளுநர் பரிசிலிக்கப்போறார். அதை கூட அவர்கள் செய்யவில்லை என்றால் எப்படி..?

விவசாயிகளை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கதக்கது, அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். விவசாயிகளை ஒடுக்கும் விதமாக, அவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்து அதை திரும்ப பெறுவது, சட்டத்தை தவறாக பயன்படுத்தி உள்ளதை காட்டுகிறது, என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பா.ஜ.க தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது எனக்கூறி உள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய இணையமைச்சர் முருகன், ஏற்கனவே தமிழ் மண்ணில் பா.ஜ.க ஆட்சி செய்கிறது, தமிழ் மண்ணில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரி தமிழ் மண், அதில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது, இதே போல் புதுச்சேரி அருகில் உள்ள தமிழக மாவட்டங்களிலும் பா.ஜ.க கால் ஊன்றும்.

பிரதமர் ஆகும் ஆசை எல்லாம் எனக்கு இல்லை, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார். தற்போது நடைபெறுகின்ற ஐந்து மாநில தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெறும். பழங்குடியினர் மக்கள் தங்களை பட்டியல் பழங்குடியினரில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. இதனை பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம், என தெரிவித்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!