நடைபயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் செயின் பறிப்பு…குடியிருப்பு பகுதியில் துணிகரம்: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!
Author: Rajesh12 May 2022, 3:52 pm
கரூர்: நடைபயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் ராமானுஜம் நகர் குமாரசாமி அபார்ட்மெண்ட் அருகில் இன்று காலை 6 மணிக்கு நடைபயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது 3 பெண்களில் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயற்சித்தனர்.
இதில் அந்த பெண் லேசான காயமைடைந்து நடுரோட்டில் விழுந்தார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அந்த நபர் தரதரவென இழுத்து சென்று செயினை பறித்து சென்றார். இந்த சம்பவத்தை கண்டு உடனிருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், செயின் பறிப்பு சம்பவம் குறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும்,, செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.