3 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற வேலூர் பொருட்காட்சி: 6 சவரன் தாலி உள்பட விலையுயர்ந்த செல்போன்கள் திருட்டு..!!
Author: Rajesh7 March 2022, 4:43 pm
வேலூர்: வேலூரில் நடைபெற்று வருகின்ற பொருட்காட்சியில் விலை உயர்ந்த இரண்டு செல்போன்கள், 6 சவரன் தாலி செயின் திருடப்பட்ட சம்பவம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்று வரும் பொருட்காட்சி தற்போது 3 ஆண்டுகளுக்கு பின் கொரோவினால் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பின் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொருட்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் சிறுவர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பொருட்காட்சியில் கலந்துகொண்டனர். இந்நிலையில் விலையுயர்ந்த இரண்டு செல்போன் மற்றும் ஒரு தம்பதியரின் 6 சவரன் தாலி செயின் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடுபோன நகையின் விலை மதிப்பு இரண்டு லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த இரண்டு செல்போனின் விலை 30 ஆயிரம் ரூபாய் இருக்கும் என போலீசார் கூறுகின்றனர்.