இளம்பெண் ஓட்டிச்சென்ற டூவீலர் மோதி விபத்து.. கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்து சென்ற ஆசாமிகள்..!!

Author: Babu Lakshmanan
15 April 2022, 2:28 pm

கன்னியாகுமரி : சுசீந்திரம் அருகே டூவிலரில் சென்ற இளம்பெண்ணை தாக்கி தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் கொட்டாரம் அடுத்துள்ள வடுகன்பற்று பகுதியைச் சேர்ந்தவர் மதுவர்தினி (20). இவர் தனது தாயார் ரேணுகாவுடன் டூவிலரில் இருளப்பபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் இருவரும் டூவிலரில் இரவு வீட்டிற்கு திரும்பினார்கள். சுசீந்திரம் புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது டூவிலரில் வந்த மர்ம நபர்கள் மதிவர்தினி மொபட் மீது மோதினார்கள்.

இதில், மதுவர்தினி, ரேணுகா இருவரும் நிலை தடுமாறி தவறிக் கீழே விழுந்தனர். உடனே மர்ம நபர்கள் மதுவர்தினி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்தனர். இதையடுத்து அவர் கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் நகையை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து ரேணுகா சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை கேட்டறிந்த போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1388

    0

    0