தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Author: Rajesh
6 March 2022, 12:37 pm

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக வடக்கு கடலோரத்தில் இருந்து 300 கி.மீ., தொலைவில், தென்மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

இது, தமிழக கடற்கரையை நோக்கி இன்று நகரும். அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை உட்பட மற்ற மாவட்டங்களில், மிதமான மழை பெய்யலாம். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் நாளை மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், துாத்துக்குடி, சிவகங்கை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழையும் பெய்யலாம்.கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், 8ம் தேதி கனமழை பெய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!