மீண்டும் மீண்டுமா…அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருக்காம்: லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!!

Author: Rajesh
15 April 2022, 5:01 pm

சென்னை: தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vijay TV celebrity wedding ஸ்டூடண்ட்டை கரம் பிடித்த விஜய் டிவி பிரபலம்….ஜாம் ஜாம்னு முடிந்த திருமணம்…!