கொளுத்தும் கோடை வெயிலில் குளுகுளு மழை…பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: உங்க மாவட்ட நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க..!!
Author: Rajesh5 April 2022, 10:30 am
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வெப்பச் சலனம் காரணமாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் அதிகபட்சம் 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நாளை மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. இது வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அதன்பின், தமிழக கடலோர பகுதிகளை இந்த தாழ்வு பகுதி நெருங்கும்.
இதன் காரணமாக, தென் கிழக்கு மற்றும் தெற்கு அந்தமான் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.