தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
Author: Rajesh20 February 2022, 3:49 pm
சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா கடல்பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு, தெற்கு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
தென் மாவட்டங்கள் , கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், 22ம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 23ம் தேதி திருப்பூர், நீலகிரி மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தளவில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் பனிமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.