7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… தூத்துக்குடி மக்களே குடையை எடுத்துட்டு வெளிய போங்க : தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2023, 10:29 am

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… தூத்துக்குடி மக்களே குடையை எடுத்துட்டு வெளிய போங்க : தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜனவரி முதல் வாரம் வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக இன்று, சென்னை டூ தூத்துக்குடி வரை கடலோரப் பகுதிகளில் இன்று 10 – 20 மி.மீ அளவுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதால் தேவாலயங்களுக்கு செல்பவர்கள் குடை எடுத்து செல்ல வேண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

மேலும், கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், ஆனாலும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 411

    0

    0