சந்தன கருப்புசாமிக்கு மதுபாட்டில்களால் மாலை… ஆதரவற்ற குழந்தைகளுக்கு கிடா வெட்டி அன்னதானம்!!
Author: Udayachandran RadhaKrishnan18 June 2023, 4:53 pm
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ராமலிங்கப்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் ஆனி அமாவாசை முன்னிட்டு பாதாள செம்பு முருகன் கோவிலில் அமைந்துள்ள 15 அடி உயரம் உள்ள சங்கிலி கருப்புசாமிக்கு சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர், பால் ,விபூதி உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பாக சாமிகளுக்கு விபூதி அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் சந்தன கருப்பு சாமிக்கு விபூதி அபிஷேகம் செய்யப்படும் பொழுது பலமாக காற்று வீசி அபிஷேகம் செய்யப்படும் விபூதி பக்தர்கள் மேல் விழ சந்தன கருப்பு சாமி தங்களுக்கு ஆசீர் வழங்கியதைப் போன்ற காட்சி காணக் கண் கோடி போதாது என்பதைப் போல் அமைந்திருந்தது பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
அபிஷேகம் நிறைவடைந்து சந்தன கருப்பு சுவாமிக்கு செவ்வந்தி மாலை, மதுபானங்களால் அலங்கரிக்கப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு ஆள் உயர தீபத்தால் தீபாராதனை காண்பிக்கப்பட்டது .தொடர்ந்து கிடா வெட்டி கருணை இல்ல குழந்தைகளுக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது , இந்த சிறப்பு பூஜை யில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
0
0