சந்திரயான் 3 வெற்றி… மகன் வீரமுத்துவேலுக்காக கையில் வேல் குத்தி நேர்த்திக்கடன் செய்த தந்தை : நெகிழ வைத்த வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan25 August 2023, 4:46 pm
விழுப்புரம் மாவட்டம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் 98 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா பக்தர்களுடன் மிக விமர்சையாக நடைபெற்றது.
அலகு குத்துதல் நிகழ்ச்சியுடன் ஆரம்பித்து, மதியம் ரத உற்சவ புறப்பாட்டினை பக்தர்கள் பட்டாசை வெடித்தும் மேளதாளம் முழுங்க ஆரம்பித்தனர்.
இந்த ரத உற்சவத்தில் சந்திராயன் 3 திட்ட இயக்குனரின் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் இத்திட்டம் வெற்றி பெற்றதையொட்டி வேண்டுதலை நிறைவேற்ற கோவிலுக்கு வருகை புரிந்து பக்தர்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கையில் காப்பு கட்டி வேல் குத்தி நேர்த்தி கடன் செலுத்தினார்.