சந்திரயான் 3 வெற்றி… இஸ்ரோவுக்கு இபிஎஸ் சொன்ன வாழ்த்து : குறிப்பிட்டு கூறிய அந்த வார்த்தை!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2023, 9:42 pm

சந்திரயான் 3 வெற்றி… இஸ்ரோவுக்கு இபிஎஸ் சொன்ன வாழ்த்து : குறிப்பிட்டு கூறிய அந்த வார்த்தை!!!

கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், சற்று முன் (6.04) மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. மிகவும் சவாலான இந்த பணியை வெற்றிகரமாக சாத்தியமாக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில், தனது X தள பக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையையும், மகிழ்ச்சியையும் உணர்கிறேன்.

விக்ரம் லேண்டரை சீராக தரையிறக்குவதன் மூலம் வேறு எந்த உலக நாடு விண்வெளி மையம் செய்ய முடியாத சாதனையை செய்துள்ளது.

நமது விழுப்புரத்தைச் சேர்ந்த இஸ்ரோ தலைவர் திரு எஸ்.சோமநாத், திட்ட இயக்குநர் திரு.பி.வீரமுத்துவேல் அவர்களுக்கும், குறிப்பாக சந்திராயன் இயக்கத்தின் முன்னோடியான முன்னாள் இஸ்ரோ தலைவர் திரு.கே.சிவனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!