பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடக்கும் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2023, 9:44 pm

பிரதமர் வருகையையொட்டி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை – கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும். இந்த நிலையில் நாளை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட்டுகள் (பிளாட்பார்ம் டிக்கெட்) வழங்கப்படாது என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 352

    0

    0