தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் சலசலப்பு : அனுமதியின்றி வாடிவாசலுக்கு வந்தவர்கள் மீது போலீசார் தடியடி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 12:06 pm

புதுக்கோட்டை : காளைகள் வாடி வாசலுக்குள் உள்ளே அனுப்பும் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடி வாசலுக்கு காளைகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் டோக்கன் படிதான் காளைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒரு சிலர் அனுமதி இன்றி உள்ளே நுழைய முற்பட்டதால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

மேலும் காளையர்களுக்கு டோக்கன் கொடுக்கும் இடத்திலும் கூட்டம் புரிந்ததால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்

  • Suddenly released video...Priya Varrier freezes in shock!! திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!