விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அங்கீகாரம் பெற்றதற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பிசெட்டிப்பட்டி மற்றும் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடினர்.
விசிகவின் வெற்றியை கொண்டாடும் வகையிலும், தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரத்தை கொண்டாடும் வகையில் மாவிளக்கு எடுத்தும் கரகாட்டம் ஆடியும் அலங்கரிப்பட்ட டிராக்டரின் நடுவில் அம்பேத்கரின் திருவுருவ படத்தை வைத்தும் அதற்கு வலது புறம் திருமாவளவனின் புகைப்படமும் இடது புறம் பொதுச் சயலாளர் ரவிக்குமாரின் புகைப்படத்தை வைத்த தேரை முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக மேளதாள இசை முழங்க வானவேடிக்கையுடன் கொண்டு வந்தனர்.
அப்போது அங்கு கூடி இருந்த பெண்கள் மகிழ்ச்சி பொங்க தலையில் பானையை சுமந்தபடி மேளதாள இசை கேட்ப நடனமாடிய காட்சி அங்கிருந்த பொது மக்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: கையெழுத்து போடுவது FASHION ஆகிடுச்சு.. டிடிஎஃப் வாசனை காண திரண்ட இளைஞர்கள்.. காவல்நிலையம் முன் அலப்பறை!
இதில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா கலந்து கொண்டு அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேரின் முன்பு பானை வைத்து நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
This website uses cookies.