பட்டாசு சத்தத்தால் வீட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை புலி….26 மணி நேரம் போராடிய வனத்துறையினர் ; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
13 November 2023, 2:26 pm

குன்னூர் அருகே குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை புலி வீட்டிலிருந்து வெளியேறிய சிசிடிவி கேமரா மூலம் உறுதி செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பூரூக்லேண்ட் பகுதியில் வசிக்கும் விமலா. இவர் வசிக்கும் குடியிருப்புக்குள் நேற்று முன்தினம் இரவு நாயை விரட்டி வந்த சிறுத்தை புலி, விமலா வீட்டுக்குள் நுழைந்தது.

இதனைத் தொடர்ந்து, வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அடிப்படையில் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சிறுத்தை புலியை வீட்டிலிருந்து வெளியே விரட்ட முயற்சி மேற்கொண்ட போது மூன்று பேரை தாக்கியது.

இதனை தொடர்ந்து, நேற்று காலை மேலும் மூன்று பேரை தாக்கியதில் ஆறு பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சிறுத்தை புலி பதுங்கி இருந்த வீட்டை சுற்றி வனத்துறையினர் சிசிடிவி கேமராக்களை பொருத்தினர். அத்துடன் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டது.

சிசிடிவி கேமரா மூலம் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்ட போது நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் சிறுத்தை புலி குடியிருப்பை விட்டு வெளியேறியது கண்டறியப்பட்டது. சிறுத்தை புலி வீட்டிலிருந்து வெளியேறும் காட்சியை வனத்துறையினர் தற்போது வெளியிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

https://player.vimeo.com/video/883898686?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

சிறுத்தை புலியால் அப்பகுதியில் 26 மணி நேரம் நடைபெற்ற பிரச்சனை முடிவுக்கு வந்தது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்