திம்பம் வளைவில் திரும்பும் போது பாய்ந்த சிறுத்தை : வாகன ஓட்டிகள் அச்சம்.. அதிர்ச்சி வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan8 January 2023, 2:46 pm
திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதை 24 வது கொண்டை ஊசி வளைவு அருகே வடபகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்று எதிர்ப்புறம் இருந்த மதில் சுவரில் அமர்ந்து கொண்டது.
இதைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் எனவும் இரவு ஒன்பது மணிக்கு முன்னதாக திம்பம் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும், ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தி சாலையில் இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
இரவு நேரத்தில் சாலையைக் கடந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.