சரக்கு அடிக்க என் வீட்டு வாசல் தான் கிடைச்சுதா.. தட்டிக் கேட்ட சமையல் கலைஞர் கொடூர கொலை!!
Author: Udayachandran RadhaKrishnan16 February 2023, 6:19 pm
கரூரில் நேற்று இரவு வீட்டு வாசலில் மது அருந்தி கொண்டிருந்த இளைஞர்களை தட்டி கேட்ட சரவணன் என்ற சமையல் கலைஞரை கத்தி மற்றும் அரிவாள் கொண்டு வெட்டி கொலை செய்துள்ளனர்.
சரவணனை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பென்சில் (எ) தமிழரசன் மற்றும் சஞ்சய் (எ) சஞ்சய் குமார் ஆகிய இருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடிகள் என்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களை கரூர் மாநகர போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்லாத காரணத்தினால் இது போன்ற கொலை சம்பவம் கரூரில் அரங்கேறி வருகிறது கரூர் மாநகராட்சியின் மத்திய பகுதியிலேயே இந்த கொலை சம்பவத்தினால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.