ஒரு பைக்கில் 3 பேர்… அதிகவனக்குறைவாக சாலையை கடக்க முயற்சி… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
23 September 2022, 5:33 pm

செங்கல்பட்டு : இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் சாலையை கடக்கும் போது கார் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு அருகே பச்சையம்மன் கோவில் பகுதியில் பாலாற்றில் மீன் பிடித்துவிட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது, அந்த சாலையில் அதிவேகமாக வந்த கார், இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இளைஞர்களுக்கு லோசான காயங்கள் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விபத்துக்கான சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன் இதே பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதும் குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?