‘இறங்குடா கீழே.. உனக்கு யாரு லைசென்ஸ் கொடுத்தா..?’ கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து… ஓட்டுநர் மீது பொதுமக்கள் ஆவேசம்!

Author: Babu Lakshmanan
28 November 2023, 1:05 pm

செங்கல்பட்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதி மிக முக்கிய பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் பகுதிக்கு இயக்கப்படுகிறது. இந்த நிலையில், திருக்கழுக்குன்றத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்பொழுது, அரசு பேருந்து செங்கல்பட்டு அடுத்துள்ள வல்லம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வெள்ளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஹார்டுவேர்ஸ் கடை மீது மோதி, விபத்துக்குள்ளானது

கடை மீது பேருந்து மோதியதால் கடையில் இருந்த பல பொருட்கள் சேதம் அடைந்தது. மோதுவதற்கு முன்பு பேருந்து சற்று வேகம் குறைந்ததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கடை சேதம் அடைந்திருந்தாலும் உள்ளே சென்ற பயணிகளுக்கு, எந்தவித காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

https://player.vimeo.com/video/888980232?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

இந்த விபத்து காரணமாக பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் மீது தவறு இருப்பதாக கூறி பயணிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?