‘இந்த பச்ச புள்ள என்னங்க பண்ணுச்சு’… பிறந்து 3 மணிநேரத்தில் சாலையில் வீசப்பட்ட பெண் குழந்தை… தாயாக அரவணைத்த திருநங்கை!!

Author: Babu Lakshmanan
15 May 2024, 2:48 pm

ஈவு இரக்கமில்லாமல் பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலை ஓரத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை திருநங்கை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே திருச்சி – சென்னை மார்க்கமாக செல்லும் சாலை ஓரத்தில் குழந்தை பிறந்து 3 மணி நேரத்திற்குள் ஆனபச்சிளம் பெண் குழந்தையை சாலை ஓரத்தில் வீசி சென்று உள்ளனர்.

மேலும் படிக்க: ‘2-3 வருஷமா உள்ளே நிறைய பேரு இருக்காங்க.. அது தெரியுமா..?’ ஜாமீன் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!!

சுங்கசாவடி அருகே நின்று இருந்த திருநங்கை ஒருவர் சாலை ஓரத்தில் குழந்தை அழுகின்ற சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது, குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் இருக்கும் பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததார்.

பின்னர், உடனே 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு போன் செய்து சாலை ஓரத்தில் வீசப்பட்ட குழந்தையை சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!