பெண் போலீசுடன் கள்ளக்காதல்..? இளைஞர் ஓடஓட வெட்டிக்கொலை.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம்!!

Author: Babu Lakshmanan
23 May 2023, 1:41 pm

செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இளைஞர் ஒருவர் ஓடஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்துள்ள தர்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் நேற்றிரவு 10 மணியளவில் கொண்டமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, செல்லும் வழியில் ஒரு பைக்கில் வந்த 3 பேர், மனோகரனின் வாகனத்தை மறித்து மடக்கியுள்ளனர்.

பிறகு, தங்களிடம் இருந்த பயங்கரமான ஆயுதங்களை வைத்து மனோகரனை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளனர். இதனால், தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு மனோகரன் தப்பி ஓடினார். பின்னர், பள்ளிக்கூட தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்தார். இதனைக் கண்டுபிடித்த அந்த கும்பல், மனோகரனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த‌து. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் காவலருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 455

    0

    0