சென்னையில் 2வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு… பல மாவட்டங்களில் நுகர்வோர் அப்செட்!!

Author: Babu Lakshmanan
31 May 2023, 12:05 pm

சென்னையில் 2வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர்.

ஆவின் பால் நிறுவனம் மூலம் சென்னையில் மட்டும் 14 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதால் சென்னையில் உள்ள மாதவரம் மத்தியபால் பண்ணை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் பால் பண்ணைகளுக்கு பால் வரத்து குறைந்துள்ளது. இதனால், ஆவின் பால் விநியோகமும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அம்பத்தூர் ஆவின் பண்ணைக்கு வரவேண்டிய பால் தாமதமாக வந்ததால், இரண்டாவது நாளாக இன்றும் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பாதிப்பு சரி செய்யப்பட்டுவிட்டு, சரியான முறையில் பால் விநியோகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Ajithkumar Vidaamuyarchi box office in Bihar பீகாரில் மாஸ் காட்டும் விடாமுயற்சி.. தவிடுபொடியாகும் முந்தைய சாதனைகள்!