வழக்கறிஞர் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு… AK47 ரக துப்பாக்கியை பயன்படுத்தியது யார்..? சென்னையில் அதிர்ச்சி..!!!

Author: Babu Lakshmanan
7 February 2024, 8:54 am

சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் உள்ள வழக்கறிஞரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தாம்பரம் மீனாம்பாள் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் தியாகராஜன். இவருக்கு பிரியா என்ற மனைவியும், விஷால் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை 3 பேரும் வீட்டில் இருந்த நிலையில், வீட்டில் இருந்த கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது. சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து கண்ணாடி உடைந்து விழுந்தது தெரிய வந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் தியாகராஜன், உடனே தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தடய அறிவியல் நிபுணர்களையும் வரவழைத்து ஆய்வு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, துப்பாக்கி குண்டை கைப்பற்றிய போலீசார், துப்பாக்கிக் குண்டு எந்த வகையைச் சேர்ந்தது? என்பது குறித்தும், குண்டு எங்கிருந்து வந்தது? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிக் குண்டு ஏகே 47 ரகத் துப்பாக்கி குண்டாக இருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!