சென்னையில் சிறுமியை நாய் கடித்த சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே கோபத்தை உண்டாக்கியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியின் 5 வயது மகள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவரின் வளர்ப்பு நாய்கள் சிறுமியை கடித்துக் குதறியது. சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து நாயை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர்.
நாய்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை ஆலந்தூர் பகுதியில் உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் ஒருவனை வளர்ப்பு நாய் கடித்த சம்பவம் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க: உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து… ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே … சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய கட்டுப்பாடு..!!!
வேளச்சேரியைச் சேர்ந்த அஸ்வந்த் என்று சிறுவன் கோடை விடுமுறைக்காக, ஆலந்தூர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் இருக்கும் தனது அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த வளர்ப்பு நாய் சிறுவன் அஸ்வந்தை கடித்த நிலையில், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நாய் ஏற்கனவே ஒரு சிறுவனை கடித்து ரூ.17 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும், தற்போது தங்கள் குடும்பத்தில் உள்ள மற்றொரு சிறுவனை கடித்திருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பாட்டி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற நாய்களினால் தெருக்களில் நடமாட முடியவில்லை என்றும், தயவு செய்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
This website uses cookies.