குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட ‘அதிர்ஷ்டலட்சுமி’ உயிரிழப்பு… விடுதியில் தங்கியிருக்கும் பெண் மற்றும் காதலன் மீது வழக்குப்பதிவு!!

Author: Babu Lakshmanan
6 March 2024, 11:04 am

சென்னை : பூந்தமல்லி அருகே குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

பூந்தமல்லி ராமானுஜர் கூடம் தெருவில் தனியார் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பெண்கள் தங்கியிருந்து கல்லூரி மற்றும் பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 15ம் தேதி அந்த மகளிர் விடுதியின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றை அதே பகுதியைச் சேர்ந்த யுவராணி என்பவர் மீட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லி போலீசா விசாரித்து வருகின்றனர். இதனிடையே, விடுதியில் தங்கியிருந்த பெண்ணும், அவரது காதலனும் குழந்தையை குப்பைத் தொட்டியில் தாங்கள் தான் வீசியதாகக் கூறி பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றனர்.

இவர்களின் டிஎன்ஏ குழந்தையின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறதா..? என்று பரிசோதனையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காதல் ஜோடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ