பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது கண்டிக்கத்தக்கது.. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குக : ஜிகே வாசன் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
10 February 2022, 11:27 am

சென்னை: பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அலுவலகத்தின் உள்ளே பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாஜக அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :- நேற்று நள்ளிரவு பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியிருப்பது கண்டிக்கதக்கது. இது ஏற்புடையதல்ல. இது சம்பந்தமாக காவல்துறை ஒருவரை கைது செய்து இருக்கிறது. மேலும் இச்செயலில் ஈடுப்பட்டு இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இச்செயல் மேலும் தொடராமல் இருப்பதற்கு பாஜக தலைமை அலுவலகத்திற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1094

    0

    0