மெட்ரோ மேம்பால பில்லர் சாய்ந்து விழுந்து விபத்து : அப்பளம் போல நொறுங்கிய அரசுப் பேருந்து… அதிர்ஷ்டசமாக உயிர் தப்பிய அரசு ஊழியர்கள்!

Author: Babu Lakshmanan
27 September 2022, 8:52 am

சென்னை : ராமாபுரம் அருகே மெட்ரோ பணிகளின் போது மேம்பால பில்லர் சாய்ந்து பேருந்து மற்றும் லாரி மீது விழுந்த விபத்தில், அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டசமாக உயிர்தப்பினர்.

இன்று காலை குன்றத்தூரில் இருந்து அரசு பேருந்து TN01 N5450 என்ற அரசு பேருந்து 8 அரசு பேருந்து பணியாளர்களை ஆலந்தூர் அழைத்துச் சென்று கொண்டிருந்தது. அப்போது ராமபுரம் பகுதியில் மெட்ரோ மேம்பால பணி நடந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக கிரேனில் இருந்த பில்லர் தவறி, சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மற்றும் லாரி மீது விழுந்தது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் அய்யாதுரை (52), பேருந்து நடத்துனர் பூபாலன் (45), லாரி டிரைவர் ரப்சித் குமார் ஆகியோருக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டு போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ