சென்னை ரயில் நிலையத்தில் பெண் கொலையா..? அதிகாரிகளின் அறை அருகே கிடந்த சடலம் ; போலீசார் விசாரணை..!!!

Author: Babu Lakshmanan
23 April 2024, 6:06 pm

சென்னை ; சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் ரயில்வே அதிகாரிகள் தங்கி ஓய்வெடுக்கும் அறை அமைந்துள்ளது. இந்த அறைக்கு வெளியாட்கள் அனுமதி இல்லாத நிலையில், 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார்.

இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: ஸ்கூட்டியில் வந்த 3 பேர் மீது காரை ஏற்றி கொலை செய்த மர்மநபர்கள் : இளைஞர் பலி.. விசாரணையில் SHOCK!

மேலும், தூக்கில் தொங்கியபடி, அமர்ந்த நிலையில் பெண் சடலமாக கிடந்த நிலையில், அவரது அருகே ரூபாய் நோட்டுகளும் கிடந்தன. அதனையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது கொலை செய்யப்பட்டாரா..? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

  • kamal haasan ott streaming after 8 weeks கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?