தனியாக செல்லும் பெண்கள் தான் டார்கெட்.. YouTube-ஐ பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட என்ஜினியர்..!

Author: Vignesh
31 May 2024, 4:45 pm
youtube theft
Quick Share

ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் பணத்தை இழந்த சிவில் இன்ஜினியர் கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்டு போலீசில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவர் youtubeபை பார்த்து தான் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளது மேலும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த சோலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் சீதாலட்சுமி, (70) இவரிடம் சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இரண்டு சவரன் தங்க செயினை பறித்து சென்றார்.

அதேபோல, கிழக்கு தாம்பரம் ஆஞ்சநேயர் தெருவில் நித்தியா சுபா (49) என்பவரிடம் 5 சவரன் தங்கச் செயினை பறித்து சென்றார். இந்த இரண்டு சம்பவங்களும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதை குற்றவாளி செயின் உடன் தப்பி செல்வதும் பதிவாகி இருந்தது.

மேலும் படிக்க: என்னடா சொல்றீங்க.. 200 மி.லி தாய்ப்பால் 700 ரூபாய்.. மெடிக்கல் ஷாப்பிற்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்..!

இதை அடுத்து, குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அதில், செயினை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய இளைஞர் எங்கெல்லாம் சென்றார் என்று பார்த்தபோது அவர் காமராஜபுரம், மப்பேடு, அகரம், பெருங்களத்தூர், முடிச்சூர், படப்பை என சென்று இறுதியாக மடிப்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டிற்குச் சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து, அந்த வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நபர் கோவில்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பதும் வயது 27 எனவும் அவர் மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் குடும்பத்துடன் சொந்த வீட்டில் தற்போது வசித்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் படிக்க: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது… புதிய அறிவிப்பால் மகிழ்ச்சியில் மாணவர்கள்..!

தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில் சிவில் இன்ஜினியரிங் முடித்து வேலை கிடைக்காத காரணத்தால் ஆன்லைன் வர்த்தகத்தில் அருணாச்சலம் பணம் செலுத்தியுள்ளார். அதில், 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், அவரது தங்கையின் 10 சவரன் நகைகளை வங்கியில் வைத்து அந்த பணம் மற்றும் கடனாக பெற்ற பணத்தில் மீண்டும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு சுமார் 14 லட்சம் வரை தற்போது இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதன்பின்னர் ராபிடோவில் பைஓட்டி வந்து youtube வீடியோக்களை பார்த்து செயின் பறிப்பில் ஈடுபடலாம் என முடிவு செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், சாலையில் தனியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டு சீதாலட்சுமி, நித்திய சுபா ஆகிய இருவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், போலீஸில் சிக்காமல் இருக்க வாகன பதிவு எண்ணை மாற்றி பயன்படுத்தி வந்துள்ளார். வரும் பத்தாம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இவரை தாம்பரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 247

0

0