சென்னை – திருவொற்றியூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
திருவொற்றியூர் சேஷாசலாகிராமணி தெருவைச் சேர்ந்த டேவிட் என்பவரது மகன் கரண் (19). இவர், மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்து வந்தார். இதனால், அதற்கான பயிற்சியும் அவர் மேற்கொண்டு வந்தார்.
இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தனது அறைக்குள் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர், பலமுறை கதவை தட்டிப்பார்த்தும் கதவை திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர்கள், ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் கரண் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அறையில் இருந்த கரண் பயன்படுத்திய செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்ததில், அதில் இருந்த வீடியோ, புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்தது.
இதனால், போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், கரண் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்..? தற்கொலைக்கு முன்பு அவர் தனது செல்போனில் உள்ள அனைத்து பதிவுகளையும் அழித்தது ஏன்..? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.