ரொம்ப முக்கியமான விஷயம் ; மாலில் தனது மகளுக்கு நேர்ந்த சம்பவம்; பெற்றோர்களை எச்சரிக்கும் வெங்கடேஷ் பட்..!

Author: Babu Lakshmanan
2 October 2023, 2:53 pm

சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற பிரபல சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட், தனது மகளுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பொதுவாக மால்களில் படிக்கட்டுகளை escalator எனப்படும் நகரும் படிக்கட்டுகளே அதிகம் அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான மக்கள் இந்த எஸ்கலேட்டரையே பயன்படுத்துவார்கள். இந்த நகரும் படிக்கட்டுகள் உள்பக்கமாக சென்று மீண்டும் சுற்றி மேலே வரும். தொடர்ந்து, சுற்றிக்கொண்டே இருக்கும்.

இந்த எக்ஸ்லேட்டரில் ஏறும் போதும், இறங்கும் போதும் கவனக்குறைவு ஏற்பட்டால், விபத்துகளை ஏற்படுத்தும். உதாரணமாக எஸ்கலேட்டர் சில வேகமாக கீழ் இறங்கி விபத்தை ஏற்படுத்தும். எஸ்கலேட்டர் இடையே இருக்கும் சிறிய இடுக்கில் புடவை கூட மாட்டும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில்தான் சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள எக்ஸ்லேட்டரில் செல்லும் போது தனது மகளுக்கு நடந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரபல சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட்.

பீனிக்ஸ் மாலில் எஸ்கலேட்டரில் செல்லும் போது அவரின் மகளின் செருப்பு எஸ்கலேட்டரில் மாட்டி, அவரது கால் உள்ளே சிக்கும் அபாயம் ஏற்பட்டதாகவும், சரியான சமயத்தில் செருப்பை கழற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், அவரின் செருப்பின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து உள்ளதாகவும், இங்கே குழந்தைகளோடு வருபவர்கள் கவனமாக இருங்கள் என்றும், நான் கவனமாக பிடித்து இழக்கவில்லை என்றால் ஏதாவது நடந்து இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக மால் நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளதாகவும், குழந்தைகளை வைத்து இருப்பவர்கள் கவனமாக இருங்கள் என்றும், இது மிகவும் சீரியஸான விஷயம், என்று தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 672

    0

    1