கூட்டணி கட்சிகளுக்கு ஒற்றை இலக்கு இடங்களை ஒதுக்கிய திமுக..?
Author: kavin kumar30 January 2022, 9:37 pm
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் இடையே உடன்பாடு என தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கீடு என தகவல் கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 வார்டுகளும், மதிமுகவுக்கு 2 வார்டுகளும் கொடுக்க திமுக முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடக்கூடிய கூட்டணி கட்சிகளுக்கான இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தை மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.