பாபா அருளால் பல கோடி சம்பாதிக்கலாம் : பிரபல தொழிலதிபரிடம் மோசடி.. சிக்கிய சென்னை தம்பதி… விசாரணையில் பரபரப்பு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 November 2022, 5:13 pm

சாய்பாபா அருளால் ரூ.200 முதல் 2 ஆயிரம் கோடி சம்பாதிக்கலாம் எனக் கூறி கோவை தொழிலதிபரிடம் ரூ.1.45 கோடி மோசடி செய்த சென்னை குடும்பத்தினர் மீது குற்றப்பிரவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் டிராவல்ஸ் மற்றும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கன்டைனர் விற்பனை பணிகளை செய்து வருகிறார்.

மேலும் சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதவற்ற இல்லங்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இவர் ஒவ்வொரு மாதமும் உதவி செய்வதை அறிந்த சென்னையை சேர்ந்த லட்சுமிபதி மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகிய இருவரும் சந்திரசேகரனை அனுகியதாக தெரிகிறது.

மேலும் நிர்மலா சாய்பாபா வின் மறு அவதாரம் என்றும், தங்களது வீடு பாபா வசிக்கும் வீடு எனக் கூறி வீட்டிற்கு அழைத்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வீட்டிறகு சென்ற சந்திரசேகரனிடம் தாங்கள் சொல்லும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் ரூ.200 கோடி முதல் 2 ஆயிரம் கோடி வரை சம்பாதிக்கலாம் என்றும் அதன் மூலம் கூடுதல் சமூக சேவையை செய்ய முடியும் கூறியுள்ளனர்.

மேலும் நிர்மலா அப்பகுதியில் உள்ளவர்களிடமும் பாபாவின் மறுஅவதாரம் எனக் கூறி குறி சொல்லி வருவதோடு, அவரை சொன்னதை நம்பி பலர் முதலீடு செய்து பணம் சம்பாதித்தாக கூறியுள்ளனர்.

இதனை நம்பிய சந்திரசேகர் லட்சுமிபதி பங்குதாரராக உள்ள நிறுவனம், மற்றும் அவர்களது உறவினராக உள்ள மோகன்தாஸ், ரேகா, கணேசன், கனலட்சுமி, உமாபதி, மாலினி, ஆகியோரிடம் கோவை சிங்காநல்லூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து பல தவணைகளாக ரூ.1.45 கோடி பணத்தை கொடுத்துள்ளார்.

3 மாதத்தில் லாபம் கிடைக்கும் என கூறிய அவர்கள் முதல் தவணையாக ரூ.5 லட்சத்தை லாபம் என கூறி கொடுத்ததுடன் அதிலிருந்து ரூ.3 லட்சத்தை பாபா கோவிலுக்கு நன்கொடையாக வழங்க வேண்டுமென கூறி பெற்றுள்ளனர்.

தொடர்ந்து அவர்களது வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி வந்த சந்திரசேகரன், ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்து பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது பணத்தை கொடுக்க முடியாது எனக்கூறிதோடு ஆட்களை வைத்து மிரட்டியுள்ளனர்.

மேலும் காவல் துறை அதிகாரி எனக் கூறி ஒருவர் பேசியதாகவும், அனைத்து ஆவணங்களை கொடுத்துவிட்டு போகவேண்டும் எனவும் மிரட்டியுள்ளதாக சந்திரசேகரன் தெரிவித்தார்.

இதனால் அவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். ஆணையாளர் உத்தரவின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரவு போலீசார் லட்சுமிபதி, நிர்மலா உள்ளிட்ட 8 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்து 3 மாதம் ஆகிய நிலையில் கைது நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் சந்திரசேகரன் மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து புகார் அளித்த போது, 8 பேருக்கும் நேரில் ஆஜராக குற்றபிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆனால் சம்மனுக்கு ஆஜர் ஆகாமல் உள்ள 8 பேரையும் கைது செய்ய வேண்டும் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதே போல சென்னை, நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்நத பல பேரிடம் மோசடி செய்திருக்க வாய்ப்பு உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

சாய்பாபா அருளால் பல கோடி சம்பாதிக்களால் கூறி கோவை தொழிலதிபரடம் பல தவணைகளாக ரூ.1.45 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 637

    0

    0