லேப்டாப் சார்ஜரால் பறிபோன பெண் மருத்துவரின் உயிர்… கோவை பெண்ணுக்கு சென்னையில் நடந்த சோகம்..!!!

Author: Babu Lakshmanan
27 May 2024, 9:35 pm

சென்னையில் லேப் டாப்புக்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் பாய்ந்ததில் பெண் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் சரணிதா (32). கடந்த 2016 ஆம் ஆண்டு டாக்டர் உதயகுமார் என்பவரிடம் திருமணம் ஆகி 5 வயதில் குழந்தை உள்ளது. உதயகுமார் கோயம்புத்தூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சரணிதா மேற்படிப்பு (எம்.டி) இறுதி ஆண்டை முடித்து 25 நாட்கள் பயிற்சிக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக இருந்து வந்தார். பயிற்சிக்காக வந்த சரணிதா அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வந்தார்.

இந்த நிலையில், சரணிதா தனது கணவரிடம் பேசிவிட்டு காலை டிபன் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார். உதயகுமார் தனது மனைவிக்கு மதியம் போன் செய்துள்ளார். சரணிதா போன் எடுக்காததால் பெண்கள் விடுதியில் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்யும் கமலா என்பவரை அழைத்து அறைக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க: கழிவுநீர் செல்வதில் தகராறு… கம்பு, கட்டை எடுத்து தாக்கிக் கொண்ட இரு குடும்பத்தார் ; ரணகளமான தெரு…!!

அறைக்குள் இருந்த சரணிதாவிடம் இருந்து பதில் ஏதும் வராததால் இது குறித்து காவல் கட்டுப்பாட்டுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மருத்துவர் சரணிதா லேப்டாப் சார்ஜரை பிடித்தப்படி இறந்து கிடந்தார்.

அதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சரணிதா லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது சார்ஜர் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 344

    0

    0