பிராமணர் ஆர்ப்பாட்டம் முதல் பின்வாங்கிய போலீஸ் வரை.. கஸ்தூரி நிபந்தனை ஜாமீன் பெற்றது எப்படி?

Author: Hariharasudhan
20 November 2024, 6:53 pm

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பிசிஆர் எனப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த நவம்பர் 3ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய கஸ்தூரி, 300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ராஜாக்களின் அந்தப்புரத்தில் தெலுங்கு பேசும் பெண்கள் இருந்ததாக பேசினார். இது தெலுங்கு மக்கள், குறிப்பாக தெலுங்கு பெண்களை அவதூறாகக் குறிப்பிடுவதாகக் கூறி தெலுங்கு மக்கள் உள்ளிட்ட பல்வேறு தெலுங்கு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனையடுத்து, கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கோரி ஒரு பதிவையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனிடையே, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக, கஸ்தூரிக்கு சம்மன் அனுப்ப அவரது போயஸ் தோட்டம் வீட்டுக்குச் சென்றபோது அவரது வீடு பூட்டப்பட்டு இருந்ததால், போலீசார் வீட்டில் சம்மனை ஒட்டிவிட்டுச் சென்றனர். இதனையடுத்து, கஸ்தூரி தலைமறைவானதாக கூறப்பட்டது. இதனிடையே, முன்ஜாமீன் கோரி கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது.

எனவே, கஸ்தூரியை தனிப்படையினர் தீவிரமாகத் தேடினர். இதன்படி, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே உள்ள பப்பலகுண்டா பகுதியில் திரைப்படத் தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

KASTHURI GOT BAIL

பின்னர், அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் நவம்பர் 29ஆம் தேதி வரை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில், ஜாமீன் கோரி கஸ்தூரி தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: வீட்டிலே பிரசவம் பார்ப்பதற்கு வாட்ஸ்ஆப் குழு.. மருத்துவத்துறையை உலுக்கிய சென்னை சம்பவம்!

இந்த மனு மீதான விசாரணயின்போது, கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்குவதில் காவல்துறைக்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், தனக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தை இருப்பதால், அதனைக் கருத்தில் கொண்டு கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இவ்வாறு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி தயாளன் உத்தரவிட்டு உள்ளார். முன்னதாக, முன்ஜாமீன் கோரியபோது, கஸ்தூரிக்கு அதனை வழங்க அரசுத் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 120

    0

    0