மின்சார ரயிலில் பெண் போலீசாருக்கு கத்திகுத்து : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Author: Babu Lakshmanan
24 August 2022, 3:36 pm

சென்னை : மின்சார ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் ஆசிர்வா, நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பெண்கள் பெட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, ரயில் புறப்படும் போது பெண்கள் பெட்டியில் நபர் ஒருவர் ஏற முயன்றுள்ளார். அப்போது போலீஸ் ஆசிர்வா அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்ந்த கத்தியை எடுத்து பெண் போலீசின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்தி தப்பி ஓடி விட்டார்.

இதனால், பலத்த காயமடைந்த அவரை, பயணிகள் அளித்த தகவலின் பேரில் பெண் போலீஸ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 539

    0

    0