கைகலப்பில் முடிந்த குடும்பப் பிரச்சனை… கத்தியால் தங்கை மற்றும் அவரது கணவரை வெட்டிய அண்ணன் கைது..!!

Author: Babu Lakshmanan
13 August 2022, 11:36 am

சென்னை : குடும்ப பிரச்சனையில் தங்கை மற்றும் மச்சானை கத்தியால் வெட்டிய சம்பவம் திருவெற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை திருவொற்றியூர் குமரன் நகர் பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ் மற்றும் அனிதா தம்பதியினர். இதில் அனிதாவின் அண்ணன் அருண்குமார் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். அருண்குமாரின் ஆட்டோ தங்கராஜ் வீட்டின் அருகே நிறுத்தி வைத்ததிருந்தார்.

இன்று ஆட்டோவை எடுப்பதற்காக அருண்குமார் வந்துள்ளார். அப்பொழுது அருண்குமார் தங்கராஜூக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அருண்குமார் தன்னிடம் இருந்த பேனா கத்தியால் தனது தங்கை என்றும் பார்க்காமல் அனிதா மற்றும் அவரது கணவர் தங்கராஜை வெட்டியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் இருந்தவர்களை அருகில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக தங்கை மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரையும் கத்தியால் வெட்டிய சம்பவம் திருவொற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Rashmika Mandanna injured at gym பெரும் சோகத்தில் மூழ்கிய ராஷ்மிகா மந்தனா…சிக்கந்தர் படப்பிடிப்பை நிறுத்திய படக்குழு..!